Friday, 25 February 2011

ஐபிஎல் மக்கள் ஆட்டமும் ஃபீபிஎல் மக்கள் திண்டாட்டமும்


இந்திய திருநாட்டின் முகமூடி கொள்ளையார்கள் இரு வகையாக உள்ளனர் (இதை எழுதும் முகமூடி இல்லை) ஒன்று அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் அதை பயன்படுத்தி மக்கள் சேவை புரியாமல் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டாவது மக்களுடைய  உணர்வுகள் மற்றும் உழைப்பை சுரண்டும் வியாபாரிகள்.

மனிதனாக பிறந்த அனைவரும் உணர்வுள்ளவர்கள். நாம் எதில் அதிகம் ஆர்வம் கொள்கிறோமோ அது சார்ந்த பொருளாகட்டும், செயலாகட்டும் அதில் நம் உழைப்பை செலுத்துகிறோம் அல்லது நம் நேரத்தை செலவிடுகிறோம். அந்த வகையில் இன்றைக்கு இந்தியாவை கொள்ளை கொள்ள வரும் 4 மாதங்களில் அரசியல் வியாபாரிகளும், ஐபிஎல் வியாபாரிகளும் வரிசை கட்டி நிற்கின்றனர். அரசியல் வியாபாரிகளை பற்றி பிறகு பேசலாம்.

இந்திய மக்களின் உழைப்பை சுரண்ட தொடங்கி இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்றைக்கு படிக்கும் மாணவர்களின் தேர்வு தயாரிப்பை முடிந்தவரை கெடுத்து கொண்டு உள்ளது.  மனித உணர்வுகள் எளிதாக வசப்பட கூடியவை என்று இந்த போட்டியினை நடத்தும் அமைப்புகள் உணர்ந்தது மட்டுமில்லாமல் இதன் மூலம் பெறக்கூடிய பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வெகு சிலரின் சட்டையை நிரப்ப போகிறது என்பதே உண்மை. இப்படி மக்களின் உணர்வுகளை கொண்டு ஒரு சந்ததியையே கெடுத்த கெடுக்கும் மனபாங்கு முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே அதிகமாக தென்படுகிறது. அதுவும் இந்த விளையாட்டுக்கள் அனைத்தும் சூதாட்ட முறையில் நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய ஒரு விதமான திருட்டை இன்றைக்கு ஆள்வோர்கள் அதிகம் ஆதரிகின்றனர். அதுமட்டுமில்லாமல் வெட்கம் கெட்ட முறையில் ஆள்வோர்களே இந்த போட்டிகளை நடத்துகின்றனர். கோடை விடுமுறையை குறிவைத்து இதன் பிறகு  ஐபிஎல் என்கிற சூதாட்டத்தை மையமாக கொண்டு  நடைபெறும் போட்டிகள் இந்திய மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கபட்ட பணத்தை வெள்ளையில் (கணக்கில்) மாற்றி கொள்ள மட்டுமே உதவுகிறது.

 நாட்டில் வறுமைகோட்டிற்க்கு கீழே உள்ள மக்களை (பிலோ பாவர்ட்டி லைன் - ஃபீபிஎல்) காக்க வேண்டிய ஆள்வோர்கள் மற்றும் முக்கிய துறை மந்திரியான விவசாய மந்திரி ஆகியோர் இந்த விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றனர். வெட்கம் இல்லாமல் விவசாய அமைச்சர் இந்த விளையாட்டு போட்டியின் தலைமை அமைப்புக்கு தலைவராகிறார். திருடனிடம் சென்று திருட்டுக்கு நியாயம் கேட்பது போல உள்ளது.

 உணவு தானியங்கள் அனைத்தும் வீணாகிவருவதை கண்டு பொறுக்காமல் இந்த அரசை பார்த்து கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றத்தை வார்த்தைகளால் தாக்கிய பிரதமர், சும்மா கிடந்து வீணாகி போனாலும் பரவாயில்லை இந்த தானியங்களை ஃபீபில் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க மாட்டோம் என்று சொல்லுகிறார். பசியோடு இருப்பவனுக்கு முன்னால் உணவை சாக்கடையில் கொட்டும் இந்த கயவர்கள் இந்த நாட்டின் தேச துரோகிகள். இவர்களா இந்த தேசத்தை நெறிபடுத்த போகிறார்கள்? இவர்களிடம் நாம் ஃபீபிஎல் மக்களின் திண்டாட்டத்தை போக்க சொல்ல முடியாது அவர்கள் செய்யவும் போவது இல்லை. ஏன் என்றால் இவர்கள் முதலாளித்துவத்தின் அப்பட்டமான ஏஜெண்டுகள்.

No comments:

Post a Comment