Monday, 7 March 2011

7 விக்கெட் இழப்புக்கு 200 கோடி

”சிறந்த அயோத்தி கடவுள்” மற்றும் அயோத்தி கடவுள் பாலம் நிபுணர் “கடவுளுக்கெல்லாம் தலைவர்” இருவரும் தலா 100 கோடி பெற்று உள்ளார்களாம் கூட்டணியில் இணைவதற்க்கு. இது தவிர சிறந்த அயோத்தி கடவுளார் பெயரில் சக்கரை ஆலை அமைக்க அனுமதியும்,  கடவுளுக்கெல்லாம் தலைவனாருக்கு சாராய ஆலை அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளதாம் கூட்டணியில் இணைவதற்க்கு.











மேலும் தகவல்கள் மாலை 4 மணிக்கு அப்டேட் செய்யப்படும்.

சீட்டுக்கட்டும் ஜோக்கர் சிரிப்பும்

கூட்டணியில் பேச்சு வார்த்தையில் சீட்டுகட்டு அளவு சீட்டு கேட்டவர்களிடம் ஜோக்கர் பண்ணிய லந்து கண்டு ரொம்பவே நொந்து போய்விட்டதாம் கதராடைகள். எல்லாம் ஜோக்கர் செய்யும் வேலை என்று சின்ன பையனுக்கு தெரிந்தாலும், கிங் கின் அனுமதி இல்லாமல் ஜோக்கர் இந்த சேஷ்டை பண்ண மாட்டார் என்று நினைக்கிறாராம் சின்ன பையன்.

கொமுகவா கொக்கா?

நிற்க போகும் அனைத்து தொகுதிகளிலும் கொமுக வெற்றி பெற உழைக்க தயாராக இருந்தாலும் பின்னல் நகரில் இப்போதே இரு தொகுதிக்கு நான்கு உடன்பிறப்பு போட்டி போட இருக்கிறார்களாம். இதில் எதை தந்தாலும் உள்ளடியில் கல்லடி பெற போகிறோம் என்று கொமுகவுக்கு தெரிந்துவிட்டதாம் அதனால் என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் திணறுகிறார்களாம்..

Sunday, 6 March 2011

சீறிய சின்ன பையன் சிந்தித்த பெரியவர்

சின்ன பையனின் சீறல் கண்டு ரொம்பவும் யோசித்து கொண்டு உள்ளாராம் பெரியவர். ஏற்கனவே தன்னுடைய ஆதரவு கோஷ்டிகள் காங்கிரஸில் கரைவது கண்டு அவருக்கு ரொம்பவே வருத்தமாம். இந்த நிலையில் இனிமேலும் இந்த கூட்டணி தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக இணக்கம் இருக்காது என்று இளைவரிடம் தனிபட்ட முறையில் சொன்னாராம்.



Saturday, 5 March 2011

கொமுகவிற்க்கு சிறிது தொழில் நுட்பம் சொல்லி கூடுங்கள்


நம்முடைய முகமூடி வலை பூ தளத்தில் சென்ற நாடாளுமன்ற தேர்தல் போது ஏற்பட்ட மோதலில் இறந்து போன கொங்கு முன்னேற்ற கட்சியின் உறுப்பினரின் மரணச்செய்தியை இன்னமும் கொமுக கட்சியின் இணையதளத்தில் வைத்துள்ளதையும், அந்த தொண்டர் இறப்புக்கு திமுக குண்டர்கள்தான் காரணம் என்பதாக கொமுக இணையதளத்தில் வெளியிட்டதை இன்னமும் அகற்றாமல் இருப்பதை வெளியிட்டோம். இதை கொமுக கவனத்திற்க்கு கொண்டு சென்ற ஒரு உடன்பிறப்பு அந்த இணையதளத்தில் உள்ள செய்தியை நீக்குமாறு கொமுகவிடம் சொன்னதாக தெரிகிறது. இதை அடுத்து கொமுக அந்த இணைய தளத்தையே நீக்கிவிட்டது. ஆனால் பாவம் அவர்களுக்கு தெரியாது அந்த செய்தி இன்னமும் இணையதளத்தில் உள்ளது என்று. 

இறந்து போன அந்த கொமுக தொண்டரின் நினைவாக இந்த செய்தி மறு பிரசுரம் செய்யப்படுகிறது.


நன்றி முகமூடி