Saturday 19 March, 2011

ஐபிசியும் முற்றபத்திரிக்கையும்

31 தேதி தாக்கல் செய்யப்படும் முற்றப்பத்திரிக்கையில் அம்மாளும் இன்னொரு அம்மாளின் மகளும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது மட்டும் நடந்துவிட்டால் தன் அரசியல் வாழ்வு அம்போதான் என்று மகள் எண்ணுகிறாராம். அப்படி ஒரு வேளை நடந்துவிட்டால் பரப்புரையை கட்சியை விட்டு நீக்கி தேர்தலை சந்திக்கவும் பெரியவர் திட்டமிட்டுள்ளாராம்.

Thursday 17 March, 2011

உயிர் பயத்தில் பரப்புரைக்காரர்

நண்பர் திடீர் தற்”கொலை  செய்து கொண்டதால் உள்ளே இருக்கும் பரப்புரைக்காரர் ரொம்பவே உயிர் பயத்தில் உள்ளாராம். தலைவரும் கட்சியும் கைவிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதால் என்ன செய்வது என்று விக்கித்து போய் உள்ளாராம். இந்நிலையில் டெல்லியில் கைகாட்டி நன்றி சொல்லும் தொழிலதிபரிடம் வேறு தொடர்புகள் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்ததை சின்னபையனுக்கு களவாணிகள் ரிப்போர்ட் சொல்லி உள்ளார்களாம்.


முடியை பிச்சுகாமல் யோசனை

சமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளரை தன் வீட்டில் சந்தித்த உச்ச நடிகர் மனம் விட்டு சில விஷயங்களை பேசினாராம். முக்கியமாக சினிமா துறை இப்படி மூன்று குடும்பங்களின் பிடியில் சிக்கி கொண்டு விட்டதே என்று வருத்தம் காட்டினாராம். இது தவிர தன் கடைசி படம் போலவே எல்லா படங்களும் எடுக்க அவர்களால் முடியுமா என்றும் நாளைக்கு சினிமா தளபதி பிரச்னை தனக்கு வராது என்பது என்ன நிச்சயம் என்றும் கேட்டாராம். நியாயம் தானே?




Wednesday 16 March, 2011

ஜோக்கருக்கு இடம் இல்லையாம் / 2 சி உள்ளேன் மேடம்

அறிவிக்க இருக்கிற தொகுதி பட்டியலில் தன் பெயர் இல்லை என்பது ஜோக்கரின் எண்ணமாம். எப்படியும் இந்த முறை திரும்ப வரப்போவது இல்லை என்பது அவர் எண்ணமாம். இது தவிர வாரிசுடன் தன்னால் ஒத்து போக முடியாது என்பதால் தன் தம்பியை நிறுத்த யோசனை சொல்லியுள்ளாராம்.
=====================================================================
நேர்காணலுக்கு வந்தவர்களின் பெயர் சல்லிக்கபட்டதாம் சோலையில். முதல் கண்டிஷனிலேயே 75 சதவீத ஆட்கள் சலிக்கபட்டு தெறித்தார்களாம். அப்படி என்ன கண்டிஷன் என்று கேட்கிறீர்களா? 2 சி டெபாசிட் பண்ண முடிந்தவர்கள் மட்டுமே உள்ளே வரலாம் என்று சொன்னார்களாம். மற்றவர்கள் நிலையை விளக்கி ஒரு துண்டு சீட்டு தர சொல்லி உத்தரவாம்.
 



வருவாரா வரமாட்டரா?

புயல் கொஞ்சம் யோசனையில் உள்ளதாம். இதுவரை தன்னை மட்டுமே  நம்பி மீதம் உள்ளவர்களுக்கு எதாவது செய்தாக வேண்டும் என்பதால் கொடுப்பதை வாங்கி கொண்டு போட்டியிடலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம். மேலும் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கரைய ஆரம்பிப்பதால், கொடுப்பதில் செல்வாக்குள்ளதை தர யோசிக்க தொடங்கிவிடகூடாது என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம்.



Tuesday 15 March, 2011

வேணாம் வலிக்குது அழுதுடுவேன்

பெரியவருக்கு துணையாக இருக்கும் ஆசிரியர் இந்த முறை தான் போட்டியிட விரும்பவில்லை என்பதை சொல்லியும் பெரியவர் கேட்கவில்லையாம். அடிக்கின்ற அலையில் எங்கே தான் தோற்று போனால் போட்டியிடாதவர்கள் நல்ல மனிதர்கள் ஆகிவிடுவார்களோ என்று ஆசிரியரையும் பவர்கட் மந்திரியையும் கண்டிப்பாக நிற்க வேண்டும் என்று வற்புறுத்தி சொல்லிவிட்டாராம். இவருக்காக நாமும் விஷ பரீட்சை எழுதணுமா என்று ஒரே முணுமுணுப்பாம்....


Sunday 13 March, 2011

புது போன்

சோலை கட்சி இதுவரை தொகுதிக்கு 10 சிம்கார்டு விதம் கிட்டதட்ட 2500 சிம்கார்டு வாங்கி நம்பர் செயல்படுத்தி வைத்து உள்ளதாம். எல்லாம் தேர்தல் அன்று காலையில் அந்தந்த மாவட்ட பொறுப்புக்களுக்கு தரதானாம். தேர்தல் அன்று எந்தவித குளறுபடியும் வரக்கூடாது என்பதோடு, எந்த எண்ணும் ஓட்டுக்கேட்பில் சிக்க கூடாது என்கிற காரணமாம். இதற்காக 25 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் அமைக்கபட்டுள்ளதாம்.