Saturday 5 March, 2011

கொமுகவிற்க்கு சிறிது தொழில் நுட்பம் சொல்லி கூடுங்கள்


நம்முடைய முகமூடி வலை பூ தளத்தில் சென்ற நாடாளுமன்ற தேர்தல் போது ஏற்பட்ட மோதலில் இறந்து போன கொங்கு முன்னேற்ற கட்சியின் உறுப்பினரின் மரணச்செய்தியை இன்னமும் கொமுக கட்சியின் இணையதளத்தில் வைத்துள்ளதையும், அந்த தொண்டர் இறப்புக்கு திமுக குண்டர்கள்தான் காரணம் என்பதாக கொமுக இணையதளத்தில் வெளியிட்டதை இன்னமும் அகற்றாமல் இருப்பதை வெளியிட்டோம். இதை கொமுக கவனத்திற்க்கு கொண்டு சென்ற ஒரு உடன்பிறப்பு அந்த இணையதளத்தில் உள்ள செய்தியை நீக்குமாறு கொமுகவிடம் சொன்னதாக தெரிகிறது. இதை அடுத்து கொமுக அந்த இணைய தளத்தையே நீக்கிவிட்டது. ஆனால் பாவம் அவர்களுக்கு தெரியாது அந்த செய்தி இன்னமும் இணையதளத்தில் உள்ளது என்று. 

இறந்து போன அந்த கொமுக தொண்டரின் நினைவாக இந்த செய்தி மறு பிரசுரம் செய்யப்படுகிறது.


நன்றி முகமூடி


இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்புது?

சனிக்கிழமை மீட்டிங்கிற்க்கு குடும்ப அழைப்பை விடுத்த பெரியவர், மூத்தவரிடம் இனிமேலும் வாய் வார்த்தை விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாராம். எல்லாம் வரும் தேர்தலுக்கு அப்புறம் இலை இருக்காது என்று உதார் பேட்டியினால் தானாம். போற போக்கை பார்த்தா வெயில்தான் இருக்காது போல இருக்கு என்று விகடகவியிடம் சொல்லி வருத்தபட்டாராம்.

Friday 4 March, 2011

சின்ன பையலின் பெரிய விளையாட்டு


தேர்தல் தேதி அறிவித்ததில் சின்ன பையனை கலந்தாலோசித்து விட்டுதான் நடந்திருக்க வேண்டும் என்று உளவு சொல்லுபவர் பெரியவரிடம் சொன்னாராம். இப்போது உள்ள உறவு நிலைகளை வைத்து பார்த்தால் தேர்தல் கமிஷன் நெருக்கடி சின்ன பையனால்தான் ஏற்பட்டது என்று பெரியவர் நினைக்கிறாராம்.
வெளியே சென்று விட்டால் கப்பலோட்டியை வைத்து ஒரு கை பார்க்கும் என்று பெரியவர் நினைக்கிறாராம். நேற்று இரவு சின்ன பையன் தலைவர் கப்பலோட்டியிடம் போனில் பேசிய போது மறுத்துவிட்டாராம். அது மட்டுமில்லாமல் கடைசியில் சீரஞ்சீவி நிலைதான் எனக்கும் வரும் என்று சொல்லி ஆட்டத்துக்கு வர மறுத்துவிட்டாராம்.



தேரோட்டிகள் ரெஸ்ட் எடுக்க

தேர்தல் வந்துவிட்டதால், தேரோட்டிகள் அனைவரையும் மாற்றிவிட எண்ணியுள்ளார்களாம். சொந்த தேரோட்டிகளை வைத்து கொள்ளலாம் என்று பிளானாம். எல்லாம் லட்சுமி தேவியை இடமாற்றம் செய்யும் போது தெரிந்து போனால் பின்னால் வம்பாக போய்விடும் என்பதால் இந்த யோசனை.
============================================================
கள் விற்பனை கனஜோராக தொடங்கிவிட்டதாம் கொங்கு மண்டலத்தில். தேர்தல் முடியும் வரை கண்டு கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டதாம் பெரிய இடம். சென்ற முறை நாடாளுமன்ற தேர்தல் போது கை நீட்டவும் வழி இல்லாதவர்கள் இப்போது யார் வருவார்கள் என்று தெரிந்துவிட்டதால், 42 நாட்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ள ரெடியாம். பழியை இப்போது உள்ளவர்கள் மீது போடவும் முடிவாம்.





Thursday 3 March, 2011

எதில் சிரிப்பது?


கொஞ்சம் ஓவரா இல்லை????

தேர்தலுக்கு முன்பே உரசும் திமுக கொமுக கூட்டணி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொமுக தனியாக நின்று வாக்குகளை பிரித்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அது திமுக கூட்டணி கலந்துவிட்டாலும் தொண்டர்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். இதனிடையே சென்ற தேர்தலில் திமுக குண்டர்கள் என்று தொண்டர்களை குறித்து பதிவிடப்பட்ட செய்தி கொமுக வலைதளத்தில் அப்படியே வைத்து உள்ளார்களாம். இது தவிர கொமுக தலைவர்கள் 7 பேருக்காக 7 சீட் உறுதி செய்ததில் யாருக்கும் இஷ்டம் இல்லையாம். இதனால் இந்த கூட்டணி தேர்தலுக்கு முன்பே இணக்கம் இல்லாமல் உரசலாகிவிட்டதாம்.

திடீர் படீர் சடீர்

கூட்டணி வருதோ இல்லையோ தேர்தல் வந்துவிட்டது. இதனால் கண்டிப்பாக ஒரு முடிவுக்கு வந்து வார இறுதிக்குள் தொகுதிகள் தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு முடிவு செய்யலாம் சீட் கேட்பதை பற்றி என்று ஏபிசிடி தலைவர் தன் அடிபொடிகளிடம் சொல்லிவிட்டாரம்.
==============================================================
இரண்டு பக்கமும் மாமாக்களை இழந்து நிற்கும் அணிகள், புதிய மாமாவிற்க்கு எங்கே போவது என்று தெரியாமல் உள்ளனராம். அதிலும் வெயில் கட்சி என்ன பண்ணியாவது இந்த முறை கப்பலோட்டியை வறுத்தெடுக்க வேண்டி உள்ளதால் நெருப்பு நீலமேகத்தை நம்பி உள்ளதாம். சோலை தரப்போ யோசனையில் உள்ளதாம்.





Wednesday 2 March, 2011

விகடகவியின் சகடைத்தனம்

விகடகவியின் சகடைத்தனம் ரொம்ப அதிகமாகிவிட்டதாம். எப்படியும் அடுத்தமுறை ஆள்வோராக இல்லாமல் போனால் சீனியாரிட்டிபடி தான் மட்டுமே முன் வரிசையில் உட்கார வேண்டியிருக்கும் என்பதால் கோப பார்வையை தவிர்க்க கல்வி கூடங்கள் தொடர்பான ரெக்கார்டுகளை பக்காவாக வைக்க சொல்லிவிட்டாராம் தம்பியிடம்.

======================================================================
இதுவும் அவரே.... குல்லாய்க்காரர்களிடம் கிண்டல் செய்ய போய் இப்போது தேர்தல் உடன்பாடு அறிவிக்கும்வரை கோயில் பக்கம் எட்டி பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்களாம்.




மங்கையும் தங்கையும்

மங்கையின் வருகையால் கடும் எரிச்சலில் இருக்கும் தங்கைக்கு மேலும் ஒரு அப்செட். இந்த முறை வாக்கு கேட்க செல்ல அனுமதி தரக்கூடாது என்று இருவரும் பெரியவரிடம் சொல்லி இருக்கிறார்களாம். இதனால் புதிதாக வந்த மங்கை கண்டிப்பாக தேர்தல் ரவுண்ட் ஒன்று அடிக்க சான்ஸ் கிடைத்துள்ளதாம். கணவர்தான் பாவம் தான் நடிக்கும் பட நாயகிகளை ஓரக்கண்ணால் பார்த்து பெருமூச்சு விடுகிறாராம்.


லைட்மேனுக்கு பின்னால்

ஓசை இல்லாமல் சினிமா பிரபலங்கள் அனைவரும் எதிர் அணிக்கு ஆதரவு தர தயாராகிவிட்டார்களாம். இதற்கு முக்கிய காரணம், சினிமா துறையே தனியார் துரையாகி விட்டதால்தானாம். மேலும் பப்ளிக்குட்டி பிடிக்காத பிரபலங்கள் இருவர் அணிக்கு ஆதரவு திரட்ட சோலையில் அப்பாயிண்மெண்ட் கேட்டு உள்ளார்களாம்.


பழைய நட்பு புதுபிக்கப்பட்டது

நொந்து போய் உள்ள அந்த நாட்டிய கடவுள் அதிகாரி தேர்தல் அறிவித்தவுடன் தான் தலைமை பதவிக்கு வர சோலை தரப்பு தேர்தல் கமிஷனிடம் கொடுக்க போகும் புகார் உதவும் என்று ஏகமாய் நம்புகிறாராம். அப்படியே வந்தாலும் இன்னும் சில மாதங்கள்தான் பணிகாலம் என்பதால் முடிந்தவரை அமைதியாக இருக்க எண்ணி உள்ளாராம். ஏதோ நீர் ஊற்றி தீ அணைந்தால் சரி.
=================================================================
சென்ற தேர்தல் காலங்களில் நடந்தது போல எதிர் அணி வேட்பாளரை கடைசி நேரத்தில் கூடாராம் மாற்றி கலவரம் ஏற்படுத்த இந்த முறை சோலை தரப்பு முழுவீச்சில் இறங்கி உள்ளதாம். மிக முக்கியமாக வெயில் கட்சி மற்றும் சேலத்து கனி கட்சியில் இருந்து வேட்பாளர்களை லபக்கி கொள்ள தனியாக ஒரு மேஜர் அமெளண்ட் ஒதுக்கி வைத்து உள்ளார்களாம்.






Tuesday 1 March, 2011

சாயம் போன எம் எல் ஏ

இதுவும் கொங்கு மண்டல எம் எல் ஏ கதைதான். இவர் கலரை மாற்றி சிவப்பில் இருந்து சரி பாதி கருப்பையும் இணைத்து கொண்டவர். ஏற்கனவே அந்த ஊரில் கொடி நட்ட முடியாத அமைச்சர் இவரை பார்த்து இளக்காரமாக (மனதிற்குள்) சிரிக்கிறாராம். மாநகர தந்தையும், கட்சியில் உள்ள அவர் துணையும்தான் கட்சி என்று தெரிந்து போய் விழி பிதுங்கி நிற்கிறாராம். தெரிந்தோ தெரியாமலோ சீட் கொடுத்துவிட்டால் மண்ணை கவ்வ வைக்க இப்போதே ஆலோசனைகள் நடக்குதாம். கோவிந்தா கோவிந்தா என்று அழ வேண்டியதுதான் அவர் பாவம்.


எகிப்து லிபியாவில் சரிய தொடங்கும் ஏகாதிபத்தியம்


 
கடந்த இரு மாதங்களாக உலகில் நடைபெற்று வரும் சம்பவங்கள் உலகம் ஒரு புதிய மாற்றத்திற்க்கான முயற்சியை தொடங்க இருப்பதை காட்டுகிறது. உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் தங்கள் அரசியல், சமூக, பொருளாதார நிலையினை மீள் பரீசிலனை செய்யக்கூடிய நிலைக்கு இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

வெறும் 25 லட்சம் மக்களை கொண்ட துனிசீய நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சி, உலகில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதமான பரிமாணங்களில் பயணிக்க தொடங்கியுள்ளது. 32 ஆண்டுகளாக எகிப்த்தை  ஆண்டு வந்த ஹோஸ்னி முபாரக் முப்பது நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் தன் பதவியை விட்டுதர வேண்டியுள்ளது என்பது, மக்கள் புரட்சியின் வீரியம் எந்த அளவு அதிகமானது என்பதை காட்டுகிறது. இதே போலதான் இன்றைக்கு 42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்டு வரும் கடாபியின் அரசாங்கமும் பரிதவித்து வருகிறது. இந்த மக்கள் எதிர்ப்பு என்பது எதை காட்டுகிறது? இந்த மக்கள் ஏன் இன்றைக்கு வீதிக்கு வந்து போராடுகிறார்கள்? இவ்வளவு ஆண்டு காலமாக ஆண்டு வந்தோர் ஏன் சில நாட்களில் இன்றைக்கு நாட்டை விட்டு ஓடி ஒளிந்துவிட்டனர்? இதற்கெல்லாம் என்ன பதில்.

இன்றைக்கு முதலாளித்துவத்தை பின்பற்றி வரும் நாட்டின் செல்வ வளங்கள் அனைத்தும் ஒரு சில ஆண்டுகளிலோ அல்லது ஒரு தலைமுறையிலோ முதலாளித்துவத்தால்  சுரண்டபட முடியாது என்பதால், முடிந்த வரை தன் எண்ண ஒட்டங்களுக்கு ஏற்ற ஒரு பொம்மை அரசை அனைத்து இயற்கை வள நாடுகளிலும் நிறுவுவதே முதலாளித்துவத்தை பின்பற்றும் அமெரிக்க பேரரசின் மறைமுக திட்டமாகும். (இந்தியாவை பற்றி பிறகு அலசலாம்) இன்றைக்கு எகிப்து, லிபிய மக்களுக்காக குரல் கொடுக்கும் இதே அமெரிக்கவிற்க்கு எகிப்து மற்றும் லிபியாவின் பொருளாதார நிலை குறித்து இதற்கு முன்பு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. முதலாளித்துவத்தின் முக்கிய அம்சமே தேவைக்கு அதிகமான நுகர்வை திணிப்பதுதான்.

தேவைக்கு அதிகமான நுகர்வை ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களின் மீது திணிக்கும்போது அங்கு சில விளைவுகள் ஏற்படும். முக்கியமானதாக நுகர்வினாள் ஏற்படும் தேவைகள் பல்கி பெருகும், அதன் பொருட்டு அந்த தேவையின் பொருட்டு ஏற்படும் போட்டி என்பது நியாயமான வர்த்தக நெறிகளை முறிக்கும், லாபம் ஒன்றே குறிக்கோள் என்கிற நிலையினை இந்த போட்டி ஏற்படுத்தும். இதன் மூலம் வர்த்தக சமன்பாடு என்பது இல்லாமல் போய்விடும். இதுதான் முதலாளித்துவம் ஏற்படுத்தும் மிக முக்கிய விளைவாகும்


தேவைக்கு அதிகமான நுகர்வை திணிக்கும் போது ஏற்பட கூடிய விளைவால் அந்த நாட்டின் இயற்கை வளங்களை அழிக்க அங்கு உள்ள அரசாங்கங்கள் தொடங்கும். அப்படிதான் 30 முதல் 40 ஆண்டு காலமாக முதலாளித்துவம் எகிப்த்தையும், லிபியாவையும் மேற்க்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் நாடுகளாக மாற்றி அங்கு தனிமனித நுகர்வை பல மடங்கு அதிகபடுத்தியது. ஒரு நாட்டில் நல்ல மாற்றமோ தீய மாற்றமோ கலாச்சாரத்தில் கொண்டுவந்து விட்டால் எளிதாக அந்த மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம். அதைதான் முதலாளித்துவம் எகிப்த்திலும், லிபியாவிலும் இன்னபிற நாடுகளிலும் செய்தது. இயற்கை வளத்தை அழிக்க தொடங்கும் (நேரிடையாக அழிக்காமல், முதலாளித்துவ மற்றும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இயற்கை வளத்தை நுகர்வுக்கு மாற்றும் தொழில்கள் தொடங்கப்படும்) போது அதன் மீதான தாக்கம் இரண்டு வகையாக வெளிப்படும்.

முதலாவதாக, இப்படி இயற்கை வளத்தை எடுத்து அதன் மூலமான தொழிற்கள் தொடங்கும் போது வெளிப்படும் இறுதி உற்பத்தி பொருள்கள் ஒன்று முதலாளித்துவ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் பொருட்டு ஏற்கனவே திணிக்கப்பட்ட நுகர்வினால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மேலும் அதிகமாகும் அதன் பொருட்டு விலைகள் உயரும்.

இரண்டாவதாக ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட அளவே இயற்கை வளத்தை கொண்டுள்ளது. இப்படி மொத்தமாக இயற்கை வளம் அழிக்கப்படும் போது, ஒரு கட்டத்திற்க்கு பிறகு இயற்கை வளம் என்பது இல்லாமல் போவதால் அடிப்படை தேவைக்கான நுகர்வு பொருள்கள் கிடைக்காமல் சென்று விடுகிறது. இது மறைமுகமாக வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அவை என்னவென்றால், அத்தியவிசய பொருள்கள் மீதான விலையேற்றம், வேலை இழப்பு, இயற்கை பயன்பாட்டு தொழிலான விவசாயம் அழிதல் ஆகியன ஆகும்.

இப்படி இரு வகையான தீய விளைவால், ஒரு கட்டத்திற்க்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு செல்ல மக்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுவார்கள். அப்படி செல்ல நினைக்கு போது இழந்துவிட்ட இயற்கையை மனிதன் உருவாக்க முடியாது. உதாரணமாக, விளைநிலங்கள் அனைத்தும் இன்றைக்கு மனை நிலங்களாகவும், பொருளாதார மண்டலங்களாகவும் மாறி வருகிறது. இதே நிலை நீடித்தால் மக்கள் ஒரு 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு பிறகு மக்களுக்கு உணவு தானியங்களும், காய்கறிகளும் கிடைக்காமல் செல்லும் போது திரும்பவும் விவசாயத்தின் மீதான பக்கம் வேறுவழியில்லாமல் திரும்புவர். ஆனால் அன்றைக்கு விவசாயம் செய்ய நிலம் என்பது இருக்காது.

மேற் சொன்ன உதாரணம்தான் இன்றைக்கு துனிசியாவிலும், எகிப்திலும், லிபியாவிலும் நடந்துள்ளது. மேற்கண்ட நாடுகள் அனைத்தும் அமெரிக்காவால் வளர்க்கப்பட்டு போலி புரட்சி நாயகர்களால் இத்துனை ஆண்டுகளால் ஆளப்பட்டு வந்துள்ளது. இந்த நாட்டில் இருந்து வெளிசென்ற இயற்கை வள மாற்று பொருள்கள் அனைத்தும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளான அமெரிக்காவிற்க்கும், இங்கிலாந்திற்க்கும் தான் அதிகமாக சென்று இருக்கும். துரதிருஷ்டவசமாக இவை அனைத்தும் இன்றைக்கு வரலாற்றில் வர்த்தக எண்களாக (Statistical Records) மாறி இருக்கும்.

எந்த முதலாளித்துவம் போலி புரட்சியாளர்களான முபாரக்கையும், கடாபியையும் வளர்த்துவிட்டதோ அதே முதலாளித்துவம் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன்னால் வளர்த்தப்பட்டவர்களை வரலாற்றில் மக்கள் விரோதிகளாக சித்தரித்து தப்பித்து கொள்ளும். அந்த கலையில் சிறந்ததுதான் அமெரிக்கா.

முகமூடி