சின்ன பையன் டேபிள் முன்னால் வைக்கப்பட்ட ரிப்போர்ட்படி கை அதிகபட்சமாக 15 இடங்களில்தான் கரம் பதிக்க முடியுமாம். இந்த லட்சணத்துல எதுக்கு இவ்ளோ சண்டை போட்டு நாயன்மார் இடம் வாங்கினோம் என்று கேட்டாராம் இளவரசரிடம், அதற்கு அவர் “இந்த தேர்தலோட நமக்கு போட்டியா ஒரு திராவிட கட்சி மட்டுமே இருக்க வேண்டும், அப்பதான் அடுத்த 5 ஆண்டுகளில் நாம் இரண்டாவது சாய்ஸா இருப்போம்” என்றாராம்.
Saturday, 12 March 2011
Friday, 11 March 2011
Thursday, 10 March 2011
Wednesday, 9 March 2011
ஐபிசியும் கிரிக்கெட் ஸ்கோரும்
வெள்ளி அன்றே கிளம்பி வந்து விட்டார்களாம் ஐபிசி ஆட்கள். டிஐசி வீட்டுக்கு ஒரு ரவுண்ட் போய் தாக்கீது தந்துவிட்டு தேர்தல் மனு தொடக்க நாள் அன்று வர சொல்லிவிட்டு வரலாம் என்பது முந்தைய திட்டமாம். எல்லாம் 5 தேதி தெரியும் அதுவரை பொறுமை என்று பொறுப்பாளி மூண்டசு ஆபிஸில் சொல்லி இருந்தார்களாம். இன்று வரை (8 தேதி) வரை பொறுமை காக்க சொன்னதால் ஹாயாக ஹோட்டல் ரூமில் கிரிக்கெட் பார்த்து கொண்டு இருக்கிறார்களாம்.
இதை பாருங்க படியுங்க ப்ளீஸ்
நண்பர் ஒருவர் முகமூடியை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பொதுவாக என் மீது வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால், நான் சும்மா பொழுது போக்கவும் எந்த வேலையும் இல்லாததாலும் எழுதுவதாக சொன்னார். என்னுடைய வலை பூ சினிமா கிசுகிசு போன்று அரசியல் கிசுகிசுதான் அதிகமாக உள்ளதாகவும், எனக்கு உண்மையிலேயே சமூக அக்கறை குறித்து எதுவும் இல்லை என்றும், அவ்வாறு இருந்திருந்தால் கண்டிப்பாக நான் சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் இந்த வலை பூவில் பதிந்திருப்பேன் என்றும் சொன்னார். அவருடன் பேசியவுடன் என்னுடைய மின்னஞ்சலுக்கு வந்த ஒரு செய்தியை இங்கே பகிர்கிறேன்.
நன்றி
இந்திய அரசியல் சமூகத்தின் கோர மூகம் காண இங்கே அழுத்துங்கள்
இந்திய அரசியல் சமூகத்தின் கோர முகம் படிக்க இங்கே அழுத்துங்கள்
நன்றி
இந்திய அரசியல் சமூகத்தின் கோர மூகம் காண இங்கே அழுத்துங்கள்
இந்திய அரசியல் சமூகத்தின் கோர முகம் படிக்க இங்கே அழுத்துங்கள்
எபிசிடி இன்னுமும் இங்க இருக்கேண்டி
நொந்து போய்விட்டதாம் பெரியவர் கட்சி. இப்படியுமா போட்டு அடிப்பது. ஏதோ நீங்க கொஞ்சம் பிகு பண்ணி பார்த்தீங்க நாங்களும் கொஞ்சம் பண்ணினோம். அதுக்காக இப்படியா என்று பால் மணம் மாறாதவர் கை தொடர்பில் இருப்பவர்களிடம் சொன்னாராம். அதற்கு சிரித்துகொண்டே எபிசிடி தலைவர் இன்னமும் டெல்லியில்தான் உள்ளார் வேணும்னா அவர்கிட்ட கருத்து கேட்கலாமா என்ற போது பால் மணம் தெறித்ததாம் நேற்று.
Tuesday, 8 March 2011
வாசமா மோசமா?
வசனைகாரர் டெல்லியில் உள்ள அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து உபசரித்தாராம் ஏன் தெரியுமா? தன்னிடமே துணையம்மாள் மாதம் இவ்வளவு சி வேண்டும் என்று யூபிஏ இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கிய போது அடித்த ரீவிட்டுதானாம்.
=======================================================================
சின்ன பையன் பேச்சுவார்த்தையில் இருந்து விலக முதல் காரணம், கசப்பு மருந்து அதிகமாகி வருவதால் சீட் கொடுத்த பிறகு தன் கோஷ்டியை குறி வைத்து உள்ளடியில் கல்லடி தர பெரியவர் தயாராக இருப்பதாக உளவுகள் சொல்லி விட்டதாம். இதனால் தன் வாரிசு வளராது என்று எண்ணம் வேறாம்.
=======================================================================
சின்ன பையன் பேச்சுவார்த்தையில் இருந்து விலக முதல் காரணம், கசப்பு மருந்து அதிகமாகி வருவதால் சீட் கொடுத்த பிறகு தன் கோஷ்டியை குறி வைத்து உள்ளடியில் கல்லடி தர பெரியவர் தயாராக இருப்பதாக உளவுகள் சொல்லி விட்டதாம். இதனால் தன் வாரிசு வளராது என்று எண்ணம் வேறாம்.
பம்மிய புள்ளி விலங்கு
கை நழுவி போனால் இந்த முறை ரொம்பவும் இறங்கி போய் பேசலாம் (பிரச்சாரம்) என்று இருந்ததாம் புள்ளி விலங்கு. ஆனால் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருப்பதை பார்த்து ரொம்பவே குழம்பி போய் உள்ளாராம். இதனிடையே முதலில் வந்து முன்னுரிமை பெற்றவர் புள்ளி விலங்கிடம் பேசி இப்போதைக்கு எதையும் பேச வேண்டாம் என்று கேட்டு கொண்டதால் அமைதியாகி விட்டதாம் புள்ளி விலங்கு.
Monday, 7 March 2011
சீமைக்கு சென்ற கள்
ஏற்கனவே நொங்கு கட்சி கள் இறக்கு போராட்டம் அறிவித்து பிறகு பெரியவர் அவர் முறையில் மிரட்டி விட்ட பிறகு கப்சிப் என்று இருந்தனர். இப்போது கூட்டணியில் இணைந்த பிறகு சீமை சரக்கு தயாரிக்க ஆலை அனுமதி நொங்கு கட்சி தலைவருக்கு தரப்பட்டுள்ளதாம். இது நொங்கு கட்சி மற்ற தலைகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.
“ஏற்கனவே இந்த ஆள் அடிக்கிறது ஃபாரின் விஸ்கி, இந்த லட்சணத்துல இவர் எங்கே போய் கள்ளூக்கு குரல் தர போறாருன்னு இருந்தோம். இப்ப என்னடான்னா சீமை சரக்கு ஆலை இவர் பெயரிலேயே தொடங்க போறாரு. பெருல மட்டும் சிறப்பு இருந்து என்ன பண்றது?”
இது தான் தற்போதைய கமெண்ட்.
“ஏற்கனவே இந்த ஆள் அடிக்கிறது ஃபாரின் விஸ்கி, இந்த லட்சணத்துல இவர் எங்கே போய் கள்ளூக்கு குரல் தர போறாருன்னு இருந்தோம். இப்ப என்னடான்னா சீமை சரக்கு ஆலை இவர் பெயரிலேயே தொடங்க போறாரு. பெருல மட்டும் சிறப்பு இருந்து என்ன பண்றது?”
இது தான் தற்போதைய கமெண்ட்.
7 விக்கெட் இழப்புக்கு 200 கோடி
”சிறந்த அயோத்தி கடவுள்” மற்றும் அயோத்தி கடவுள் பாலம் நிபுணர் “கடவுளுக்கெல்லாம் தலைவர்” இருவரும் தலா 100 கோடி பெற்று உள்ளார்களாம் கூட்டணியில் இணைவதற்க்கு. இது தவிர சிறந்த அயோத்தி கடவுளார் பெயரில் சக்கரை ஆலை அமைக்க அனுமதியும், கடவுளுக்கெல்லாம் தலைவனாருக்கு சாராய ஆலை அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளதாம் கூட்டணியில் இணைவதற்க்கு.
மேலும் தகவல்கள் மாலை 4 மணிக்கு அப்டேட் செய்யப்படும்.
மேலும் தகவல்கள் மாலை 4 மணிக்கு அப்டேட் செய்யப்படும்.
கொமுகவா கொக்கா?
நிற்க போகும் அனைத்து தொகுதிகளிலும் கொமுக வெற்றி பெற உழைக்க தயாராக இருந்தாலும் பின்னல் நகரில் இப்போதே இரு தொகுதிக்கு நான்கு உடன்பிறப்பு போட்டி போட இருக்கிறார்களாம். இதில் எதை தந்தாலும் உள்ளடியில் கல்லடி பெற போகிறோம் என்று கொமுகவுக்கு தெரிந்துவிட்டதாம் அதனால் என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் திணறுகிறார்களாம்..
Sunday, 6 March 2011
Subscribe to:
Posts (Atom)