Saturday 26 February, 2011

சின்ன பையனை திட்டிய பெரியவர்

ரொம்ப வருஷம் முன்னாலே சின்ன பையன் என்று அழைக்கப்பட்டவர் இன்று தன் மகனை துணையாக கொண்டுவர பிளான் போட்டு இளவரசரிடம் பர்மிஷன் வாங்கிவிட்டாராம் அதனால் தான் குறைந்தது மூன்றில் ஒன்று வேண்டும் என்று மல்லுக்கட்டி நிற்கிறாராம். இது தெரியவந்த பெரியவர் ரொம்பவே அப்செட்டாம். போற போக்கை பார்த்தா இப்போது இருக்கிற துணை மீண்டும் துணையாவது கஷ்டம் என்று நெருங்கியவர்களிடம் நெக்குருகி சொன்னாராம்.

Friday 25 February, 2011

ஐபிஎல் மக்கள் ஆட்டமும் ஃபீபிஎல் மக்கள் திண்டாட்டமும்


இந்திய திருநாட்டின் முகமூடி கொள்ளையார்கள் இரு வகையாக உள்ளனர் (இதை எழுதும் முகமூடி இல்லை) ஒன்று அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் அதை பயன்படுத்தி மக்கள் சேவை புரியாமல் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டாவது மக்களுடைய  உணர்வுகள் மற்றும் உழைப்பை சுரண்டும் வியாபாரிகள்.

மனிதனாக பிறந்த அனைவரும் உணர்வுள்ளவர்கள். நாம் எதில் அதிகம் ஆர்வம் கொள்கிறோமோ அது சார்ந்த பொருளாகட்டும், செயலாகட்டும் அதில் நம் உழைப்பை செலுத்துகிறோம் அல்லது நம் நேரத்தை செலவிடுகிறோம். அந்த வகையில் இன்றைக்கு இந்தியாவை கொள்ளை கொள்ள வரும் 4 மாதங்களில் அரசியல் வியாபாரிகளும், ஐபிஎல் வியாபாரிகளும் வரிசை கட்டி நிற்கின்றனர். அரசியல் வியாபாரிகளை பற்றி பிறகு பேசலாம்.

இந்திய மக்களின் உழைப்பை சுரண்ட தொடங்கி இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்றைக்கு படிக்கும் மாணவர்களின் தேர்வு தயாரிப்பை முடிந்தவரை கெடுத்து கொண்டு உள்ளது.  மனித உணர்வுகள் எளிதாக வசப்பட கூடியவை என்று இந்த போட்டியினை நடத்தும் அமைப்புகள் உணர்ந்தது மட்டுமில்லாமல் இதன் மூலம் பெறக்கூடிய பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வெகு சிலரின் சட்டையை நிரப்ப போகிறது என்பதே உண்மை. இப்படி மக்களின் உணர்வுகளை கொண்டு ஒரு சந்ததியையே கெடுத்த கெடுக்கும் மனபாங்கு முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே அதிகமாக தென்படுகிறது. அதுவும் இந்த விளையாட்டுக்கள் அனைத்தும் சூதாட்ட முறையில் நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய ஒரு விதமான திருட்டை இன்றைக்கு ஆள்வோர்கள் அதிகம் ஆதரிகின்றனர். அதுமட்டுமில்லாமல் வெட்கம் கெட்ட முறையில் ஆள்வோர்களே இந்த போட்டிகளை நடத்துகின்றனர். கோடை விடுமுறையை குறிவைத்து இதன் பிறகு  ஐபிஎல் என்கிற சூதாட்டத்தை மையமாக கொண்டு  நடைபெறும் போட்டிகள் இந்திய மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கபட்ட பணத்தை வெள்ளையில் (கணக்கில்) மாற்றி கொள்ள மட்டுமே உதவுகிறது.

 நாட்டில் வறுமைகோட்டிற்க்கு கீழே உள்ள மக்களை (பிலோ பாவர்ட்டி லைன் - ஃபீபிஎல்) காக்க வேண்டிய ஆள்வோர்கள் மற்றும் முக்கிய துறை மந்திரியான விவசாய மந்திரி ஆகியோர் இந்த விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றனர். வெட்கம் இல்லாமல் விவசாய அமைச்சர் இந்த விளையாட்டு போட்டியின் தலைமை அமைப்புக்கு தலைவராகிறார். திருடனிடம் சென்று திருட்டுக்கு நியாயம் கேட்பது போல உள்ளது.

 உணவு தானியங்கள் அனைத்தும் வீணாகிவருவதை கண்டு பொறுக்காமல் இந்த அரசை பார்த்து கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றத்தை வார்த்தைகளால் தாக்கிய பிரதமர், சும்மா கிடந்து வீணாகி போனாலும் பரவாயில்லை இந்த தானியங்களை ஃபீபில் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க மாட்டோம் என்று சொல்லுகிறார். பசியோடு இருப்பவனுக்கு முன்னால் உணவை சாக்கடையில் கொட்டும் இந்த கயவர்கள் இந்த நாட்டின் தேச துரோகிகள். இவர்களா இந்த தேசத்தை நெறிபடுத்த போகிறார்கள்? இவர்களிடம் நாம் ஃபீபிஎல் மக்களின் திண்டாட்டத்தை போக்க சொல்ல முடியாது அவர்கள் செய்யவும் போவது இல்லை. ஏன் என்றால் இவர்கள் முதலாளித்துவத்தின் அப்பட்டமான ஏஜெண்டுகள்.

டீ, காபி மிக்ஸர் மீட்டிங்

பிறந்த நாள் பரிசாக தேர்தல் உடன்பாடு கண்டுவிட வேண்டும் என்று எண்ணிதான் வந்தார்களாம். ஆனால், எங்கே எதிர் அணியில் நேற்று வரை எதிர்த்தவர் காலையில் அதிக சீட் வாங்கி அதனால் ரொம்ப நாளாக உடன் இருப்பவர்களுக்கு மனத்தாங்கல் வந்த மாதிரி இங்கேயும் ஆகிவிட கூடாது என்று இரு தரப்பு தலைவர்களும் எஸ் எம் எஸ் மூலம் செய்தி பரிமாறி கொண்டார்களாம். மீட்டிங்கிற்க்கு வந்தவர்கள் டீ காபி மிக்ஸர் சாப்பிட்டு விட்டு சென்றார்களாம்.


Thursday 24 February, 2011

இடறும் மிடறும்

கூட்டணியில் சேர்ந்தாலும் வெற்றி வாய்ப்பு நம்பிக்கை சுத்தமாக இல்லையாம் அவருக்கு, காரணம் என்னவென்றால் எப்படியும் உள்ளடியிலயே தங்கள் வேட்பாளர்களை இடற வைக்க தயாராக இருப்பதாக பதிவு செய்யப்பட்ட  செல்போன் பேச்சு தலைவரிடம் போட்டு காட்டினார்களாம். இது தவிர இந்த முறை வேட்பாளராக அறிவிக்காமல் இருக்க கட்சிகாரர்கள் கடவுளை வேண்டிகொண்டு சும்மா பெயருக்கு தங்கள் விருப்ப மனுவை தலைவரிடம் தர போகிறார்களாம்.


Wednesday 23 February, 2011

இது தெரியுமா?

கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு புதிய மாநகர கதை இது.
தந்தைக்கு துணையாக அரசியலில் பாம்புக்கு அரசராக பெயரையும் கொண்டவர் தினமும் இரவு வீடு செல்லும் போது குறைந்தது 3 லகரம் எடுத்து செல்லுகிறாராம். இது தவிர மாதம் குறைந்தது 5 முதல் 7 ஏக்கர் நிலம் அவர் அடிப்பொடிகள் பெயரில் பதிவாகிறதாம். எல்லாம் பஞ்சாயத்து வசூல்தான்.


Tuesday 22 February, 2011

கீரியும் பாம்பும்

வெளியில் கீரியும் பாம்புமாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே இருவரும் நெருக்கம் காட்டுகிறார்களாம். இதனால் இருபக்கமும் இருப்பவர்கள் இதுவரை கோள் சொல்லிய விஷயங்கள் எங்கே வெளியே வந்து விடுமோ என்று பயந்து கிடக்கிறார்கள். இதற்கு காரணம் குரங்கு ஆப்பத்தை பங்கு போட்ட கதையாக உள்ளதும் போச்சுடா என்று மூன்றாம் வழியால் ஆகிவிடக்கூடாது என்கிற எண்ணம் தானாம்.



அப்படியா?

விஷயம் கேள்விபட்ட வரையில் கொஞ்சம் சீரியசாகதான் உள்ளது. வேறு ஒன்றும் இல்லை, அடிக்கடி வெளிநாடு செல்லும் அவர் புதிய ரத்தம் பாய்ச்சி கொண்டு வருவதாக கேள்வி. இந்த முறை சோதனைக்கு சென்ற போது கொஞ்சம் தெம்பாகவே பதில் தரப்பட்டதாம். ஆனால், உண்மையில் ரொம்ப வருடம் தாங்க கூடிய அளவு இல்லையாம் நிலைமை.

தகவல் சொன்ன மனிதர் வேறு ஒன்றும் சொன்னார்.... இவருக்கு இது வந்து இருக்ககூடாது வேறு ஒன்று வந்து இருக்க வேண்டும் என்று சொன்னார்.

- முகமூடி.


புதிய தொடக்கம்


வணக்கம் வலைத்தள அன்பர்களே… முகமூடி என்ற பெயரில் வலைப்பூ தொடங்கி உள்ள நான் சமூக, அரசியல் நிகழ்வுகளை பதிவிட உள்ளேன். சிற்சில காரணங்களால் என்னுடைய முகத்தை மறைத்து முகமூடி என்கிற பெயரில் பதிவிட உள்ளேன். உங்கள் மேலான ஆதரவை தருமாறு கோருகிறேன்.

நன்றி

முகமூடி