குரங்காட்டி தலைவர் கட்சி, கப்பல் தலைவர் கட்சியினரை தோற்கடிக்க முழு வீச்சில் இறங்கி வேலை செய்வது போல காட்டினாலும் உள்ளே ஸ்லோவாகதான் போக கட்டளையாம். குரங்காட்டி தலைவர் “ ஜெயிச்ச பின்னாடி ரொண்டு தலைமை தலைவர்களுக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவை இருந்தால்தான் நாம் பிழைத்து இருக்க முடியும். போன தடவை மதிமுகவை எப்படி உடைச்சாரு இவரு?? பார்த்திங்கல்ல?” என்று மகன் உள்ளிட்டோரிடம் சொன்னாராம். இதனால் கப்பல் தலைவரை எதிர்க்கும் வெயில் கட்சி தொகுதிகளில் கடைசி நேர உள்ளடி கண்டிப்பாக உண்டாம்.
Friday, 1 April 2011
Thursday, 31 March 2011
தமிழை கொன்ற கற்பு
கற்பு சூறாவளியாக வெயில் கட்சிக்கு வாக்கு கேட்டு வருகிறது. இந்த லட்சணத்தில் வட மாவட்டங்களில் சீறும் பூனை கட்சி இளவட்டங்கள் இந்த முறை அவரை எட்ட இருந்து காண ஆவலாய் இருப்பது கண்டு சொறிவேரா தலைவர் தலையில் அடித்து கொண்டு இருக்கிறாராம். இது தவிர நொங்கு ஏரியாவில் கற்பின் பிரச்சார்த்தை கேட்ட ஒரு ம செ “தமிழை இந்த கொல்லும் கொல்லும் இந்த பொம்பளை எப்படி தலைவர்கிட்ட பேசும் போது தலைவர் சகிச்சுகிறாரோ?” என்று வருந்தினார்.
Wednesday, 30 March 2011
சிரித்த பெரியவர் சிரிக்காத சிறியவர்
தண்ணி வண்டி தலைவருக்கும் மன(மர)குரங்கு தலைவருக்கும் வார்த்தை போர் அதிகரித்து வருவதை கண்டு வெயில் கட்சி பெரியவர் ரொம்பவும் ரசித்து சிரித்தாராம். ஏற்கனவே உள்ளடியில் கல்லடி தயாராக இருக்கும் கூட்டணி கட்சியினர் தவிர்த்து இந்த மாதிரி வம்பை வளர்ப்பது குரங்கு தலைவர் வெல்ல வாய்ப்பு குறைவு என்று அவர் மகன் சொன்னாராம். மேலும் இதை வளர்க்க வேண்டாம் என்று அப்பாவிடம் சொன்னாராம்.
Friday, 25 March 2011
செந்தமிழன் சீமான் தேர்தல் சுற்று பயண விபரம்
நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் சுற்றுப் பயண விவரங்கள்.
25.03.2011 – வெள்ளி
மாலை – 5.00 மணி – திசையன் விளை
26.03.2011 – சனி
காலை 9.00 – மணி – உவரி
காலை 10.- 00 – மணி - இராதாபுரம்
காலை 12.00 - மணி - காவல் கிணறு
மாலை 05.00 - மணி - வள்ளியூர்
இரவு - 8.00 – மணி – களக்காடு
27.03.2011 - ஞாயிறு
காலை – 10-00 – மணி – புளியங்குடி
நண்பகல் – 6.00 – மணி – கடையநல்லூர்
மாலை - 8.00 0 - மணி – விருதுநகர்
28.03.2011 – திங்கள்
காலை – 10..00 – மணி – வேடசந்தூர்
நண்பகல் 12.00 – மணி – நிலக்கோட்டை
மாலை – 5.00 - மணி திருப்பரங்குன்றம்
இரவு 8.00 – மணி – மதுரை வடக்கு
29.03.2011 – செவ்வாய்
காலை – 11.00 – மணி – இராமேஸ்வரம்
மாலை – 5-00 - மணி – இராமநாதபுரம்
இரவு - 8.00 - மணி - பரமக்குடி
30.03.2011 – புதன்
காலை 11.00- மணி – சிவகங்கை
மாலை 5-00 மணி –காரைக்குடி
இரவு 8.00 – மணி –திருமயம்
31.03.2011 – வியாழன்
காலை 10.00 – மணி – பொன்னமராவதி
நண்பகல் 12.00 – மணி – அரிமளம்
மாலை 5.00 – மணி – பேராவூரணி
இரவு 8.00 - மணி - பட்டுக்கோட்டை
01.4.2011 வெள்ளி
காலை 11.00 – மணி – திருத்துறைப்பூண்டி
மாலை 5.00 - மணி - மயிலாடுதுறை
இரவு 8.00 - மணி - பாபநாசம்
02.04.2011 – சனி
காலை – 11.00 மணி அரியலூர்
மாலை - 5.00 – மணி – விருத்தாச்சலம்
இரவு - 8.00 – மணி – ரிசிவந்தியம்
03.04.2011 ஞாயிறு
காலை – 11.00 மணி - சென்னை மயிலாப்பூர்
மாலை – 5.00 – மணி - இராயபுரம்
இரவு - 8.00 - மணி - தியாகராயர் நகர்
04.04.2011 - திங்கள்
காலை விமானப் பயணம் – கோவை
காலை 11.00 – மணி – சிங்காநல்லூர்
மாலை 5.00 - மணி – தொண்டாமுத்தூர்
இரவு 8.00 - மணி - கோவை
05.04.2011 - செவ்வாய்
காலை 10.00 – மணி – அவிநாசி
மதியம் 5.00 மணி – திருப்பூர்
மாலை 7.00 - மணி – காங்கேயம்
இரவு 9.00 - மணி - கரூர் ;
06-3-2011 - புதன்கிழமை
காலை 11.00 – மணி – திருச்செங்கோடு
மாலை 5.00 - மணி - மொடக்குறிச்சி
இரவு 8.00 - மணி - ஈரோடு
07.04.2011 - வியாழன்
காலை 10.00 மணி – ஆத்தூர்
மதியம் 1.00 மணி – சேலம்
மாலை 5.00 மணி – கிருஷ்ணகிரி
இரவு 8.30 மணி - ஓசூர்
08.04.2011 – வெள்ளி
காலை 10.00 – திருப்பெரும்புதூர்
நண்பகல் 12.00 – மணி – சோளிங்கர்
மாலை 5. 00 -மணி - ஆம்பூர்
இரவு 8.00 - மணி - வேலூர்
09.04.2011 - சனி
காலை – 10. 00 மணி – கலசப்பாக்கம்
நண்பகல் – 12. 00 – மணி – செங்கம்
இரவு - 6.00 - மணி - புதுவை
10.04.2011 - ஞாயிறு
காலை 11. 00 – மணி – விமானப் பயணம் – தூத்துக்குடி
மாலை 5.00 - மணி -விளாத்திக்குளம்
இரவு 8.00 - மணி ஸ்ரீவைக்குண்டம்
11.04.2011 – திங்கள்
மதுரையிலிருந்து காலை விமானப் பயணம் – சென்னை
காலை 10.00- மணி – மதுராந்தகம்
நண்பகல் 1.00 மணி – பூந்தமல்லி
நண்பகல் 3.00 – மணி – ஆவடி.
நிறைவுப் பொதுக்கூட்டம்
Thursday, 24 March 2011
கறுப்பு ஆடுகள்
இணையத்தில் சோலை கட்சிக்கு ஆதரவாக அதிக பதிப்புகள் கடந்த ஒரு மாதமாக வெளியாவதில் கடும் அதிர்ச்சியில் உள்ள வெயில் கட்சி, உளவு துறையில் உள்ள நுண்ணறிவு பணியாளர்களை கொண்டு கிட்டதட்ட 50 புதிய பதிவர்களின் பெயரில் பதிவிட்டு வருகிறதாம். மேலும் சோலை கட்சி தலைமை கூட்டணியில் செய்த சில லடாய்களை முன் நிறுத்தி அதிக பதிவிட சொல்லியுள்ளாராம் இதற்கு தலைமை வகிப்பவர்.
===================================================================
அதே வகையில் புலி கட்சியின் கூட்டணி விலகல் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு கணிசமான இழப்புகளை சோலைக்கு ஏற்படுத்தும் என்றும் அதிக பதிவுகள் வெளிவருமாறு கட்டளையிட்டுள்ளதாம் இதை கையாளும் தலைமை.
வாக்களிக்க மாட்டோம், நம் இனத்தை கறுவறுத்த காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

Wednesday, 23 March 2011
Tuesday, 22 March 2011
கம்பிக்குள் வெளிச்சமில்லை
கம்பிக்குள் வெளிச்சம் இனி மேல் வரப்போவது இல்லை என்று உறுதியாக மன்னருக்கு சொல்லிவிட்டார்களாம். அனேகமாக இன்னும் சில மாதம் உள்ளேயே களி திங்க வேண்டும் என்பதோடு இல்லாமல் தேர்தல் முடிந்தபிறகு தன்னை வெளிகொண்டு வர முயற்சி எடுக்க போவது இல்லை என்று அவருக்கு தெரிந்துவிட்டதாம். இது தவிர தான் இனிமேல் சொன்னதயே சொல்லி கொண்டு இருக்க வேண்டும் என்று மேலிட உத்தரவால் கலங்கி போய் உள்ளாராம்.
வாக்களிக்க மாட்டோம், நம் இனத்தை கறுவறுத்த காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.
வாக்களிக்க மாட்டோம், நம் இனத்தை கறுவறுத்த காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.
டெரர் ஆன உளவாளி
தலைமை உளவாளியை டெல்லியில் வைத்து பேச அழைத்தது எதற்கு என்று பெரியவர் யோசித்தாராம். நடந்துவிட்ட தற்கொலையில் முக்கிய பங்கு ஆற்றியவர்கள் அரபி கடலோரம் செட்டில் செய்து வைத்துள்ள விஷயம் மேலே தில்லி உளவாளிகளுக்கு தெரிந்து விட்டதாம். வேறு விதமாக தலைமை உளவாளியை மடக்க நினைத்து டெல்லி வர சொல்லி உத்தரவாம்.
வாக்களிக்க மாட்டோம், நம் இனத்தை கறுவறுத்த காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.
வாக்களிக்க மாட்டோம், நம் இனத்தை கறுவறுத்த காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.
Monday, 21 March 2011
மூணுக்கு முன்னூறு
மூன்றாவது வந்தால் மூன்னூறு சிஆர் தர தயாராக கை இருந்தாதாம். ஆனால் அப்படி எதாவது அணி வந்தால் கண்டிப்பாக வரி விலங்கு தலைவர் இருப்பார் மற்றும் சிவப்பு கட்சியும் இருக்கும் அதில் எனவே வாங்க மாட்டார்கள் என்று இங்கிருந்து தகவல் போனதாம்.
==================================================================
கொங்கு மண்டலத்தில் நொங்கு கட்சியின் ஒரு தொகுதியில் உடன்பிறப்பு நிற்க போவதில் அதிக வேலை செய்வது எதிர் அணி முருக ஆயுதம் கொண்டர்தானாம். ஜெயித்தால் மந்திரி ஆன பிறகு அதில் ஒரு கட்டிங் தர போவதாக உடன்பிறப்பிடம் சொல்லி சுயேச்சையாக நிற்க பணமுறுத்தி உள்ளாராம்.

Sunday, 20 March 2011
தலை(பாகை) மாறுகிறது
கண்டிபடி தீன்று தீர்த்து வருவதாலும், பழைய ஊழல்கள் வெளிவருவதாலும் தலைபாகையை மாற்ற யோசித்து வருகிறாராம் இளவரசர். இதனிடையே தன்னை வேண்டும் மட்டும் உபயோகபடுத்திவிட்டு சக்கையாக வீசுவதில் உடன்பாடு இல்லையாம் தலைபாகைக்கு. (அட இந்த ஆளுக்கும் ரோசத்தை பார்ய்யா?) இதனிடையே 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு யோசிக்கலாம் என்று சின்ன பையன் சொன்னாராம்.
உயிரை எடுத்த உயிரின் உயிர்
உயிரின் உயிரை எடுத்தது தன்னுயிர் என்று உணர்ந்துவிட்டதாம் உள்ளே இருப்பவருக்கு. இதனிடையே தன்னை வைத்து டெல்லி பிணக்குகள் தீர்க்கபட்டது கண்டு உறைந்து போய் உள்ளாராம்.
==================================================================
வெள்ளை மனதின் உள்ளே ரொம்பவும் சந்தோஷமாக உள்ளாராம். மெல்ல தன்னை கட்சியிலும் கழட்டிவிட்டு வருவதை கண்டு வெளியே சோக முகம் காட்டினாலும் உள்ளுக்குள் இதைதான் எதிர்பார்த்தாராம். சென்ற முறை சேர்த்த சொத்துமட்டும் மலையளவு கிடக்க இந்த முறை பதவி இல்லாததால் தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று மனம் குளிர்ந்து இருக்கிறாராம்.

Saturday, 19 March 2011
ஐபிசியும் முற்றபத்திரிக்கையும்
31 தேதி தாக்கல் செய்யப்படும் முற்றப்பத்திரிக்கையில் அம்மாளும் இன்னொரு அம்மாளின் மகளும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது மட்டும் நடந்துவிட்டால் தன் அரசியல் வாழ்வு அம்போதான் என்று மகள் எண்ணுகிறாராம். அப்படி ஒரு வேளை நடந்துவிட்டால் பரப்புரையை கட்சியை விட்டு நீக்கி தேர்தலை சந்திக்கவும் பெரியவர் திட்டமிட்டுள்ளாராம்.
Thursday, 17 March 2011
உயிர் பயத்தில் பரப்புரைக்காரர்
நண்பர் திடீர் தற்”கொலை” செய்து கொண்டதால் உள்ளே இருக்கும் பரப்புரைக்காரர் ரொம்பவே உயிர் பயத்தில் உள்ளாராம். தலைவரும் கட்சியும் கைவிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதால் என்ன செய்வது என்று விக்கித்து போய் உள்ளாராம். இந்நிலையில் டெல்லியில் கைகாட்டி நன்றி சொல்லும் தொழிலதிபரிடம் வேறு தொடர்புகள் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்ததை சின்னபையனுக்கு களவாணிகள் ரிப்போர்ட் சொல்லி உள்ளார்களாம்.
முடியை பிச்சுகாமல் யோசனை
சமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளரை தன் வீட்டில் சந்தித்த உச்ச நடிகர் மனம் விட்டு சில விஷயங்களை பேசினாராம். முக்கியமாக சினிமா துறை இப்படி மூன்று குடும்பங்களின் பிடியில் சிக்கி கொண்டு விட்டதே என்று வருத்தம் காட்டினாராம். இது தவிர தன் கடைசி படம் போலவே எல்லா படங்களும் எடுக்க அவர்களால் முடியுமா என்றும் நாளைக்கு சினிமா தளபதி பிரச்னை தனக்கு வராது என்பது என்ன நிச்சயம் என்றும் கேட்டாராம். நியாயம் தானே?
Wednesday, 16 March 2011
ஜோக்கருக்கு இடம் இல்லையாம் / 2 சி உள்ளேன் மேடம்
அறிவிக்க இருக்கிற தொகுதி பட்டியலில் தன் பெயர் இல்லை என்பது ஜோக்கரின் எண்ணமாம். எப்படியும் இந்த முறை திரும்ப வரப்போவது இல்லை என்பது அவர் எண்ணமாம். இது தவிர வாரிசுடன் தன்னால் ஒத்து போக முடியாது என்பதால் தன் தம்பியை நிறுத்த யோசனை சொல்லியுள்ளாராம்.
=====================================================================
நேர்காணலுக்கு வந்தவர்களின் பெயர் சல்லிக்கபட்டதாம் சோலையில். முதல் கண்டிஷனிலேயே 75 சதவீத ஆட்கள் சலிக்கபட்டு தெறித்தார்களாம். அப்படி என்ன கண்டிஷன் என்று கேட்கிறீர்களா? 2 சி டெபாசிட் பண்ண முடிந்தவர்கள் மட்டுமே உள்ளே வரலாம் என்று சொன்னார்களாம். மற்றவர்கள் நிலையை விளக்கி ஒரு துண்டு சீட்டு தர சொல்லி உத்தரவாம்.

வருவாரா வரமாட்டரா?
புயல் கொஞ்சம் யோசனையில் உள்ளதாம். இதுவரை தன்னை மட்டுமே நம்பி மீதம் உள்ளவர்களுக்கு எதாவது செய்தாக வேண்டும் என்பதால் கொடுப்பதை வாங்கி கொண்டு போட்டியிடலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம். மேலும் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கரைய ஆரம்பிப்பதால், கொடுப்பதில் செல்வாக்குள்ளதை தர யோசிக்க தொடங்கிவிடகூடாது என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம்.
Tuesday, 15 March 2011
வேணாம் வலிக்குது அழுதுடுவேன்
பெரியவருக்கு துணையாக இருக்கும் ஆசிரியர் இந்த முறை தான் போட்டியிட விரும்பவில்லை என்பதை சொல்லியும் பெரியவர் கேட்கவில்லையாம். அடிக்கின்ற அலையில் எங்கே தான் தோற்று போனால் போட்டியிடாதவர்கள் நல்ல மனிதர்கள் ஆகிவிடுவார்களோ என்று ஆசிரியரையும் பவர்கட் மந்திரியையும் கண்டிப்பாக நிற்க வேண்டும் என்று வற்புறுத்தி சொல்லிவிட்டாராம். இவருக்காக நாமும் விஷ பரீட்சை எழுதணுமா என்று ஒரே முணுமுணுப்பாம்....
Sunday, 13 March 2011
புது போன்
சோலை கட்சி இதுவரை தொகுதிக்கு 10 சிம்கார்டு விதம் கிட்டதட்ட 2500 சிம்கார்டு வாங்கி நம்பர் செயல்படுத்தி வைத்து உள்ளதாம். எல்லாம் தேர்தல் அன்று காலையில் அந்தந்த மாவட்ட பொறுப்புக்களுக்கு தரதானாம். தேர்தல் அன்று எந்தவித குளறுபடியும் வரக்கூடாது என்பதோடு, எந்த எண்ணும் ஓட்டுக்கேட்பில் சிக்க கூடாது என்கிற காரணமாம். இதற்காக 25 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் அமைக்கபட்டுள்ளதாம்.
Saturday, 12 March 2011
உள்துறையின் உள் குத்து
சின்ன பையன் டேபிள் முன்னால் வைக்கப்பட்ட ரிப்போர்ட்படி கை அதிகபட்சமாக 15 இடங்களில்தான் கரம் பதிக்க முடியுமாம். இந்த லட்சணத்துல எதுக்கு இவ்ளோ சண்டை போட்டு நாயன்மார் இடம் வாங்கினோம் என்று கேட்டாராம் இளவரசரிடம், அதற்கு அவர் “இந்த தேர்தலோட நமக்கு போட்டியா ஒரு திராவிட கட்சி மட்டுமே இருக்க வேண்டும், அப்பதான் அடுத்த 5 ஆண்டுகளில் நாம் இரண்டாவது சாய்ஸா இருப்போம்” என்றாராம்.
Friday, 11 March 2011
Thursday, 10 March 2011
Wednesday, 9 March 2011
ஐபிசியும் கிரிக்கெட் ஸ்கோரும்
வெள்ளி அன்றே கிளம்பி வந்து விட்டார்களாம் ஐபிசி ஆட்கள். டிஐசி வீட்டுக்கு ஒரு ரவுண்ட் போய் தாக்கீது தந்துவிட்டு தேர்தல் மனு தொடக்க நாள் அன்று வர சொல்லிவிட்டு வரலாம் என்பது முந்தைய திட்டமாம். எல்லாம் 5 தேதி தெரியும் அதுவரை பொறுமை என்று பொறுப்பாளி மூண்டசு ஆபிஸில் சொல்லி இருந்தார்களாம். இன்று வரை (8 தேதி) வரை பொறுமை காக்க சொன்னதால் ஹாயாக ஹோட்டல் ரூமில் கிரிக்கெட் பார்த்து கொண்டு இருக்கிறார்களாம்.
இதை பாருங்க படியுங்க ப்ளீஸ்
நண்பர் ஒருவர் முகமூடியை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பொதுவாக என் மீது வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால், நான் சும்மா பொழுது போக்கவும் எந்த வேலையும் இல்லாததாலும் எழுதுவதாக சொன்னார். என்னுடைய வலை பூ சினிமா கிசுகிசு போன்று அரசியல் கிசுகிசுதான் அதிகமாக உள்ளதாகவும், எனக்கு உண்மையிலேயே சமூக அக்கறை குறித்து எதுவும் இல்லை என்றும், அவ்வாறு இருந்திருந்தால் கண்டிப்பாக நான் சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் இந்த வலை பூவில் பதிந்திருப்பேன் என்றும் சொன்னார். அவருடன் பேசியவுடன் என்னுடைய மின்னஞ்சலுக்கு வந்த ஒரு செய்தியை இங்கே பகிர்கிறேன்.
நன்றி
இந்திய அரசியல் சமூகத்தின் கோர மூகம் காண இங்கே அழுத்துங்கள்
இந்திய அரசியல் சமூகத்தின் கோர முகம் படிக்க இங்கே அழுத்துங்கள்
நன்றி
இந்திய அரசியல் சமூகத்தின் கோர மூகம் காண இங்கே அழுத்துங்கள்
இந்திய அரசியல் சமூகத்தின் கோர முகம் படிக்க இங்கே அழுத்துங்கள்
எபிசிடி இன்னுமும் இங்க இருக்கேண்டி
நொந்து போய்விட்டதாம் பெரியவர் கட்சி. இப்படியுமா போட்டு அடிப்பது. ஏதோ நீங்க கொஞ்சம் பிகு பண்ணி பார்த்தீங்க நாங்களும் கொஞ்சம் பண்ணினோம். அதுக்காக இப்படியா என்று பால் மணம் மாறாதவர் கை தொடர்பில் இருப்பவர்களிடம் சொன்னாராம். அதற்கு சிரித்துகொண்டே எபிசிடி தலைவர் இன்னமும் டெல்லியில்தான் உள்ளார் வேணும்னா அவர்கிட்ட கருத்து கேட்கலாமா என்ற போது பால் மணம் தெறித்ததாம் நேற்று.
Tuesday, 8 March 2011
வாசமா மோசமா?
வசனைகாரர் டெல்லியில் உள்ள அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து உபசரித்தாராம் ஏன் தெரியுமா? தன்னிடமே துணையம்மாள் மாதம் இவ்வளவு சி வேண்டும் என்று யூபிஏ இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கிய போது அடித்த ரீவிட்டுதானாம்.
=======================================================================
சின்ன பையன் பேச்சுவார்த்தையில் இருந்து விலக முதல் காரணம், கசப்பு மருந்து அதிகமாகி வருவதால் சீட் கொடுத்த பிறகு தன் கோஷ்டியை குறி வைத்து உள்ளடியில் கல்லடி தர பெரியவர் தயாராக இருப்பதாக உளவுகள் சொல்லி விட்டதாம். இதனால் தன் வாரிசு வளராது என்று எண்ணம் வேறாம்.

பம்மிய புள்ளி விலங்கு
கை நழுவி போனால் இந்த முறை ரொம்பவும் இறங்கி போய் பேசலாம் (பிரச்சாரம்) என்று இருந்ததாம் புள்ளி விலங்கு. ஆனால் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருப்பதை பார்த்து ரொம்பவே குழம்பி போய் உள்ளாராம். இதனிடையே முதலில் வந்து முன்னுரிமை பெற்றவர் புள்ளி விலங்கிடம் பேசி இப்போதைக்கு எதையும் பேச வேண்டாம் என்று கேட்டு கொண்டதால் அமைதியாகி விட்டதாம் புள்ளி விலங்கு.
Monday, 7 March 2011
சீமைக்கு சென்ற கள்
ஏற்கனவே நொங்கு கட்சி கள் இறக்கு போராட்டம் அறிவித்து பிறகு பெரியவர் அவர் முறையில் மிரட்டி விட்ட பிறகு கப்சிப் என்று இருந்தனர். இப்போது கூட்டணியில் இணைந்த பிறகு சீமை சரக்கு தயாரிக்க ஆலை அனுமதி நொங்கு கட்சி தலைவருக்கு தரப்பட்டுள்ளதாம். இது நொங்கு கட்சி மற்ற தலைகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.
“ஏற்கனவே இந்த ஆள் அடிக்கிறது ஃபாரின் விஸ்கி, இந்த லட்சணத்துல இவர் எங்கே போய் கள்ளூக்கு குரல் தர போறாருன்னு இருந்தோம். இப்ப என்னடான்னா சீமை சரக்கு ஆலை இவர் பெயரிலேயே தொடங்க போறாரு. பெருல மட்டும் சிறப்பு இருந்து என்ன பண்றது?”
இது தான் தற்போதைய கமெண்ட்.

Subscribe to:
Posts (Atom)